1.நம்பியே நடக்கிறேன்….
வழியெங்கும் நஞ்சாழி – எங்கோ தெரிகிறது அமுத ஊற்று.
நீந்திக் கொண்டே இருக்கிறேன்.
பொழிகிறது அமில மழை – என்றாவது வரும் வான் தேன் நீர்.
காத்துக் கொண்டே கிடக்கிறேன்.
அழிவின் விளிம்பில் பயிர்த்தாள்கள் – தூரத் தெரியும் கருமேகம்.
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.
முன்னே நட்பாய்ப் பொய்க் கரங்கள் – முதுகைத் துளைக்கும் மெய்வாள்கள்.
ஆற்றிக் கொண்டே நடக்கிறேன்.
வண்ணம் மாற்றும் பச்சோந்தி – அன்ன, நீளும் சொந்தங்கள்.
தேற்றிக் கொண்டே கடக்கிறேன்.
துடுப்பும் கரமும் இழந்தாலும் - அலைகள் கரைகள் அறியுமே.
அலையின் முதுகில் என் வாழ்வு.!
பாறை நம்பும் தேரைக்கு - கருணைக் கரங்கள் விரியுதே.
இயற்கையின் விரல்களில் என் காலம்!.
தேய்ந்த உடலின் மீதியை – நிலவும் நம்பித் தேடுதே.
நம்பி நகர்வதே என் பயணம்.!
No comments:
Post a Comment