Sunday, March 10, 2019

எது ஞான நதி?

எது ஞான நதி?


யார் நீக்குவார்
என் கறையை?

புண்ணிய நதிகளைத்
தேடியலைந்தன
என் பாதங்கள்.

தினம் தினம் ஒரு கரை.
மூழ்கி மூழ்கி
குளித்துப்  பார்க்கிறேன்.
என் கறை மட்டும்
கரையவில்லை.

நதிகள் என்னுள் குளித்து
தூய்மையாய் நகர்கின்றன.
நதிகளுக்குத்தான்
மோட்சம்.
அழுக்குடன் தேங்கியதோ
மீண்டும் மீண்டும்
எனதுடல்!

இன்றும் ஒரு நதி
கண்டேன்.
வாய் திறந்து
கேட்டும் விட்டேன்.

யார் நீக்க முடியும்
என் கறையை?
நீ செய்வாயா?

நீயே செய்.. என
நகைப்பு மேலிட,
நளினமாய்ச் சொல்லி
நகர்ந்து நடந்தது
என் சிநேகித நதி!

கால் கூட
நினைக்கவில்லை.
ஞான நதியில்
குளித்தெழுந்தேன்.!

No comments:

Post a Comment