Saturday, January 20, 2024

வான் = கவிதை

 வான் = கடவுள்.



உலக உயிர்களுக்கு ஊண்; 

இதுவே

உலகம் உய்ய நிற்கும் தூண்!


காத்துக்கிடக்கிறது கான்; 

உடன் 

கவலை நீக்குகிறது வான்!


கருணையின் மறுபெயர் தான் கார்; -அதுவே,

 உயிர்களுக்கு உரமூட்டும் வேர்!


விண்ணையும் மண்ணையும் இணைக்கும் நாண்;

 உனக்கும் எனக்கும் கடவுளே அது காண்!


உருவத்தில் வருகின்ற தெய்வம் இது. ஏன்?- 

அது

 பருவத்தில் பக்குவமாய் சொரிகிறது தேன்!


பாரபட்சம் பார்க்காது பவனி வரும் தேர்;

ஆதலால் தான் வானுக்கும் தெய்வமென்று பேர்!


விண்ணிறங்கி மண்நோக்கும் கடவுளினை நான் அறியேன்;

வானிறங்கி மண்காக்கும் வான் கடவுள் நான் அறிவேன்!


கேட்டார் கேளார் அனைவர்க்கும் கற்பகத்தரு; 

வான்...

ஆத்திகர் நாத்திகர் யாவர்க்கும் கடவுளின்உரு.!